குவாடன் பெயில்ஸ்க்கு மலையாள படத்தில் வாய்ப்பு

ஆஸ்திரேலிய சிறுவன் குவாடன் பெயில்ஸ் மலையாள திரைப்படமான ஜானகியில் நடிக்கிறார்.

யார் இந்த குவாடன் பெயில்ஸ் ?

உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டு குறைந்த வளர்ச்சியை கொண்ட ஒன்பது வயது சிறுவன் குவாடன் பெயில்ஸ். இவர் தனது குறைந்த வளர்ச்சியால் பள்ளி மாணவர்களிடம் அதிக கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனால் தன்னை கொன்றுவிடும்படி தன் தாயிடம் மன்றாடிய வீடியோ சமூக தளங்களில் பரவி இவருக்கு ஆதரவாக உலகமெங்கும் இருந்து ஆதரவு குரல்கள் ஒலிக்க துவங்கின.

இந்நிலையில் அவருக்கு கடிதம் எழுதிய மலையாள நடிகர் பக்ரு, தானும் சிறு வயதில் பல அவமானங்களுக்கு ஆளானதாகவும் ஆனால் தன் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற போது உற்சாகமடைந்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த கடிதத்தை படித்த குவாடனின் தாய் சிறு வயதில் இருந்தே தன் மகனுக்கு நடிப்பில் ஆர்வம் உள்ளதால் ஒரு நடிகர் ஆதாரவாக பேசுவது தன் மகனுக்கு ஊக்கமளிப்பதாக கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பக்ரு “ உனக்கு நடிக்க ஆர்வமிருப்பதால் மலையாளத்தில் வரவிருக்கும் ஜானகி என்ற திரைப்படத்தில் உனக்கான வாய்ப்பை பெற்றுள்ளேன். படப்பிடிப்பு துவங்கும் போது படக்குழு உன்னை அழைக்கும். மேலும் இந்த படம் ஊனமுற்றோர்களுக்கு ஆதரவான படம்” என பதில் அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.